Home / கலை / கவிதை (page 4)

கவிதை

முகமூடிகள்

Share  நாம் என்றோம் நீ என்றீர் சமம் என்றோம் ஆண்ட பரம்பரை என்றீர் சாதிய இழிவு ஒழிய வேண்டும் என்றோம் தமிழர் பண்பாடு என்றீர் எங்கள் ஊரைக் கொளுத்தினர் உன் அண்ணன் தானே செய்தான் என்றீர் எங்கள் உயிரைக் கொன்றனர் கள்ள‌த்தனமாக வேடிக்கை பார்த்தீர் எங்களுடன் நின்றவர் சிலர் அவர்கள் வந்தேறி என்றீர்   வந்தேறிகள் எதிரி ...

Read More »

தியாக தீபம். திலீபன்

Share    செங்கரும்புச் சாறும் செவ்வாழை நறுந்தாரும் நொங்குமதன் மேவும் நன்மருந்தாகி நெல்லியும் மாங்கனியும் நன்னீரும் மறுத்திருந்த நின்னை தாங்கிய தேகமது தியாகம்   செங்கதிர் வீசக்கூசும் மயிலோன் முகமுமதன் பங்கானச் சித்திரக் கருவிழியு மதனாடியும் சிங்களத்தைக் கூர்போடுஞ் சொல்லும் பல்லுமதன் மங்காத புன்னகையும தழகு தங்கை யரும்பாலகரும் படுந்துயரா லுந்தன் தங்கை யர்போல் உள்நினைந்து ...

Read More »

மெளன சாட்சி

Share மங்கிய மாலைப் பொழுது இரவின் வணக்கத்துடன் சில்லென்ற காற்று சிலிர்த்த சாரல் புன்னகைத்த உதட்டுடன் கிடந்த பெற்றோர் தத்தி எழுந்த பருவ கால நினைவு மின்னல் வெட்டொளியின் ஊடே பதற்றமாய் தம்பியுடன் தோழி என்னை நோக்கி, இருவரும் ஆடைகள் கலைந்து சற்றே நிமிர்ந்து அகன்று விரிந்த என் கண்களைக் கண்டு பரிதாபகரமாய் என்னைக் கடந்து ...

Read More »

மந்திரக்காரனின் புறா

Share  வண்ணப் படிமங்கள் படர்ந்த மின் திரையின் அம்புக்குறித் தீண்டலில் களங்கிக் கலைகிறதென் கனவுகளின் கன்னித்தன்மை   விரல்களைக் குதறியெடுத்து விரைந்தோடும் எலிகளை விரட்டிப் பிடித்து பொறிக்குள் அடக்குமுன் தட்டச்சிய எழுத்துகள் வார்த்தைச் சட்டங்களில் இருந்து தாவிக் குதித்து மறைகின்றன…   சொல்நஞ்சுகள் துருத்தியபடி கிடக்கும் மென்பஞ்சு இருக்கையில் புரையோடிக் கிடக்கின்றன காயங்கள் புசித்த நுண்ணுயிரிகள்… ...

Read More »

துளியாக ஒரு தீவு

Share  மணல் திட்டுகளில் முட்டி நின்றாலும் கரையேறுவது நிச்சயமில்லை… வன்மம் கொப்பளிக்கும் வங்கக் கடலில் மறைந்துலவும் மச்சராசிகள் ஒவ்வொன்றுக்கும் மடிந்தவர்களின் மலங்களும் அழுகிப் போன உறுப்புகளுமே உணவாக இருக்கலாம்…   சூழ் சுற்றிய திட்டுகளுக்கப்பால் சூரியோதயம் அரங்கேறிக் கொண்டிருந்தது விடியல் நித்தம் நிகழும் போதிலும் அது எமக்கானதாக இல்லையென்ற அறிவிப்பொன்று கூடவே வருகிறது அதிர்வில்லாமல்… ஆழியின் ...

Read More »

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ?

Share  விழும் மழைத்துளி காமுகன், கடவுள், குழந்தை, விவசாயி, புத்தகப்புழு என ஐந்து பரிணாமங்களில் மாறி மாறி விழும்போது என்ன சொல்கிறது என்று நீங்களே கேளுங்களேன்.!! காமுகனாக!! கலவிகொள்ளும் மோக மேகத்தின் உச்சம் நான்.. விதைகளுக்கு உயிரூட்டும் விந்து நான்.. பெற்றவள் தொடாததையும் உற்று, உள் சென்று, உரசி, உருண்டு,உலர்ந்து உடலை தழுவும் உணர்ச்சிப் பித்தன்..நான்.. ...

Read More »

வரலாறு ஒரு போதும் புதைந்ததில்லை

Shareமதங்கள்மகுடங்கள்பிணமலைகள்அஞ்சும்உயர்ந்தகூரிய கலுமரங்கள்.காற்றின்தேகமெங்கும்மரண ஓலங்கள்.உயிர் வதை மட்டுமேஉயர்வாய் நினைக்கும்சிம்மாசன சித்தாந்தங்கள்!கொடையும் கொற்றமும்மனித அமைதியின் மீதுநடத்தும்மரணப்படுகொலைகள்.புச்சன் வால்ட்இன அழிப்பை மிஞ்சும்அஃறினைகளும்.அநாகரீகம்காரி உமிழும்முள்ளிவாய்க்கால் .அசோகா சக்கரத்தின்ஆரக்கால் முழுதும் – நாறும்பிண நாற்றம் .வாய்மை கூட வெல்லுமாம்மகாத்மாவின்மௌனப் புன்னகை.சுவாதிக் நாஜிகளின்மரண மிதிகளில் தப்பியயூத பிணங்களின்நரவேட்டைகுழந்தைகளையும் பெண்களையும்“விடாதே கொல்”காசா தெருவெங்கும்மாவீரன் அராபத்தின்விடுதலை சுவடுகள்?… குருதி படிந்த மண்குற்றுயிரில் தெரிந்தசதைத் துண்டுகொத்தி குதறியகழுகுகள் கூடஎச்சமிட்டுசபித்துப் ...

Read More »

தனி நாடு வருமென்று…

Shareஎல்லா உயிர்களும் சேர்ந்து தான் சுழலுதே பூமி! உயிர்களில் உயர்வு, தாழ்வு இல்லையே சாமி! -இல்லையே சாமி…! எல்லாரும் ஒரு நாளில் மரிக்க, எதை கொண்டு உயர் சாதி, தாழ் சாதி பிரிக்க…. மனசிருந்தால், மனுச சாதி…. இல்லையேல் மிருக சாதி…. இதைத்தவிர வேறுசாதி இல்லை, இருப்பதெல்லாம் பொய்யின் பிள்ளை….. வேர்களின்றி செடிகள் பூப்பதில்லை…… ஆனால் ...

Read More »

யாராவது கொல்லுங்களேன்….

Share    அம்மா…. கால் ரெண்டும் காணலமா ரொம்ப வலிக்கிதுமா முடியலமா அம்மா…. அண்ணாவ மாதிரியே என்னையும் கொல்லச் சொல்லுமா அம்மா…. ரொம்ப வலிக்கிதுமா பிணமான தாய் என்ன செய்வாள் பாவம்!!! யாராவது கொல்லுங்களேன் கதறும் அவன் அப்பாவையும் சேர்த்து காசா!!!! – பாரதிதாசன்

Read More »

ஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:

Shareகடற்கரை மணலின் அலையில் முகம் புதைய கிடந்தனர் நான்கு சிறுவர்கள். அப்பொழுது அந்தியின் கடைவாயில் இருந்து ஷெல்கள் சீறிப் பாய்ந்தன.   ஷிஃபாயின் மருத்துவமனை நிணமும் கெட்டி குருதியும் விம்மல்களும் துடிக்கும் தொண்டைக் குழிகளும்     அங்கே கூட ஆங்காரங் கொண்ட தீச்சுவாலைகள் விழுங்கித் தின்றன ஆக்சிஜன் சிலிண்டர்களும் சிரிஞ்சுகளும் சாகக் கிடந்தன. அது ...

Read More »