Home / கலை / கவிதை (page 5)

கவிதை

கற்குவியலாகும் தேசம்

Share  எனக்கென்று ஒரு வீடு இருந்தது அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கி விட்டனர் அவர்கள் எங்களை அழைத்துச் சொல்கின்றனர் அடுத்த சில நிமிடங்களில் உன் வீடு மீது தான் தாக்குதல் என்று நாங்கள் இயலாமையில் உயிர்பிழைக்க வீட்டை விட்டு ஓடுகின்றோம் வந்து விழுகின்ற ஒரு ஏவுகணை எங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் புதைக்கின்றது இலக்கு வெற்றி ...

Read More »

மாக்களின் சாதி

Share பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம் சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம் நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி நத்தம் காலனியிலதனால் ...

Read More »

எம்தாய் பிள்ளை நான்தான்

Share தலையில் பிறந்ததாய் தலைக்கனம் கொண்டவன் – என் தலைமேல் கால் வைத்தான் வாமனக் காலால் எனைமிதித்தான் தோள் வழியில் பிறந்ததாய் திமிர் மொழி கொண்டவன் – எனை ஏகலைவன் என்றான்- என் வில் கலையெல்லாம் தன் கலையென்று என் பெரு விரலைக் கொன்றான் மாமுடி மணிமுடி தன்முடி சூட – என் தெருவடி தேடி ...

Read More »

அம்மா அவள் தான் முதன்மையானவளாம்!- உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -2

Shareஅம்மா அவள் தான் முதன்மையானவளாம்! அவள் அரவணைப்பில்தான் பூமிப்பந்தே பூத்துக்குலுங்கியதாம் உயிர்திணைகள் அஃறிணைகள் சுற்றி…சுற்றி,.. வலம் வருமாம் செல்லப் பிராணிகளாய். பூக்களைச் சொறிந்து வாழ்த்தின செடிகள் பழங்களை உலுக்கி சந்தோசித்தன மரங்கள் ஓடைகளும் சுனைகளும் அவ்வாறே! கலப்பையோ, மண்வெட்டியோ கண்டுபிடிக்கவே இல்லை கரடு முரடானது அவள் பயணம் ஓய்வேயில்லாமல். இயற்கையின் இம்சை தாளாது தாயானாள்! தந்தையானவன் ...

Read More »

தலைப்புகள் அவசியமற்ற தொகுப்புகள்…

Shareசுதந்திரப்போர் சூட்சமம் இரவி பியாஸ் நதிக்கரை பகத் சிங்கின் தோழர்கள் படைத்தவனையே சோதித்தது வெடிகுண்டு பகவதி சரண்!!! நாளின் மௌனம் நடக்க மறுத்த மரணம்! தண்ணீரில் தகனம் தவணை முறையில் அச்சுறுத்தும் அதிகாரம் அலைகளுக்கு அர்ப்பணித்தாள் துர்காதேவி! தேசத்தையும் காதலித்தவள் கனன்றது காதல் கம்பீரமாய்… குறிப்பு : பகவதி சரணும் அவரது மனைவி துர்கா தேவியும், ...

Read More »

நூறாவது குடியரசு தினம்

Shareவழிப்பறி கூட வளமான தொழில் தான் பாதையோர மரங்களை பாதுகாப்போம் மறைந்து பறிக்க ஏதுவாய் இருக்கும் பிரதமர் சூளுரை. பசியோ பஞ்சமோ கொஞ்சமும் நுழைய வழியேல்லை அணுமின் குப்பையை அவுல்,பொறி ஆக்கலாம் கலாய்க்கிறார் கலாம் தள்ளாத வயதிலும். ஒழிக்கவே முடியாது ஊழலும் லஞ்சமும் உச்சவரம்பையாவது தீர்மானிக்கலாம் முடிவுக்கு வராமல் முடங்கி போனது பாராளுமன்றம். காடும் மரமும் ...

Read More »

வரலாறென்பது…..

Shareவரலாறென்பதுவாக்கியங்களால்நிரப்பப்படுவதன்று!வழிந்தோடும் மனிதக்குருதிகளால்வரையப்படுவதுஇன்று வரைக்கும்போராட்டமும் பேரழிவுந்தான்வாழ்க்கையாகிவிட்டதுவரலாறென்பதுவாக்கியங்களால்நிரப்பபடுவதன்று! சந்தாவில் துவங்கிஜார்கண்ட் வரைநீளும்…நீளும்கழுமரங்களாய் நீளும்கலிங்கத்தை மிஞ்சும்மனிதப்படுகொலைகள்காக்கிச் சட்டைகள்நிகழ்த்திய காமக்கொடூரங்கள்புழை கிழிந்த பெண்டீர்தம்மரண ஓலம்பாறைகளும் வருத்தப்படும்மறைவிடம் தந்த மகாபாவத்துக்காய்லத்தி தந்த குற்றத்துக்காய்தலைகுனிந்து வெட்கப்படும்மரங்கள்….! அஹிம்சையை அரிதாரமாய்பூசிக்கொண்ட அசோகச் சக்கரமேஎங்களை இந்தியன் என்றுஇம்சிக்காதே வரலாறென்பதுவழிந்தோடும் மனிதக்குருதிகளால் வரையப்படுவது! எங்கள்வில்லையும்அம்பையும்களவாடியவர்களுக்குத் தெரியாதுகண்ணிவெடிகளைஎங்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியுமென்று!!! – பாரதி தாசன்

Read More »

இளவரசா!

Shareஇளவரசா! உன் காதலுக்கு வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன் கொடக்காரியம்மன் குடியிருக்கும் மரத்தடியில் காதல் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன். வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட தமிழ்த் தாயிடம் உன் சாவைப் பாடிட எப்படியடா வார்த்தை கேட்பது ? இளவரசா! வாழ வேண்டியவனடா நீ. காதல் கதறியழ கருமேகம் கண்ணீர் சிந்த பெற்றோரின் பெருந்துயரைப் பேசுவோரும் ...

Read More »