Home / கலை / திரை நோக்கு

திரை நோக்கு

“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா

Shareநவம்பர் 8, 2016  அன்று மாண்புமிகு பிரதமர். நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார், இதனால் இந்தியாவில் ஊழல் ஒழியும் அதற்காக சில சிரமங்களை தாங்கி கொள்ளுங்கள் என்றார். அந்த நிகழ்வின் ஓராண்டு முடிந்ததை அடுத்து 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதால் உண்டான தாக்கங்களையும் நினைவுகளையும் பதிவு செய்வதற்காக ...

Read More »

உங்கள் கழிவுகளைத் தொடுகிறவர்கள்

Shareகையில் ஒரு ஒளிபடக் கருவி கிடைத்ததும், மலை சுற்றுலாவுக்கோ, கடற்கரைக்கோ சென்று படமெடுக்கும் இளைஞர்களைத் தான் பார்த்திருக்கிறேன். தொழிற்முறை கலைஞர்களின் புகைப்பட கண்காட்சிகள் பெரும்பாலும் பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருக்கும். படங்களைப் பார்த்து புரிந்து கொள்வதற்கே நிபுணத்துவம் தேவைப்படுமோ என்கிற அளவில் படைப்புகள் இருக்கும். ஒளி , வண்ணங்கள் இவைகளின் கூட்டுக்கலவையில் மாய்மாலங்களை நிகழ்த்தும் ஒளிபடக் கலைஞர்களைப் ...

Read More »

அறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது!

Shareகோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா, ராமசந்திரன், சுனுலட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் படம்தான் அறம். பல கைகளை காப்பாற்ற மேலிருந்து வரும் கையோடு, “அறம்” எனும் தலைப்பு திரையில் விரிய தொடங்குகிறது திரைப்படம். இந்திய ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகில் இருக்கும், காட்டூர் எனும் ஊரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது கதை.  “தண்ணி தாகம் ...

Read More »

சாப்ளினும் – சர்வாதிகாரிகளும்

Shareஎன் ஆதர்ச நாயகன் சார்லி சாப்ளினின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல் 16). இன்றுடன் அவருக்கு 128 வயது முடிவடைகின்றது. எளிய மக்களின் வாழ்வை அவரைப் போல யாரும் தொடர்ந்து திரையில் காட்டியதில்லை. சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு இயக்குனர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், சிறந்த சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டி உன்னதமான மனிதர் ...

Read More »

கபாலி! அழகியலும்! அரசியலும்!

Shareவிளிம்பு நிலையில் வாழும் தலித் மக்களின் வாழ்வியலை கதையின் போக்கில் மிக யதார்த்தமாய், அனுதாபத்தை விலக்கி, அழகு கொஞ்ச அதனை ரசிக்கும் வண்ணம் காண்பிப்பது தான் இயக்குநர் ரஞ்சித்தின் படைப்புகளில் இருக்கும் சிறப்பு. அட்டகத்தியில் வரும் தினேஷை ரசிக்காமல் இருப்பது முடியாத காரியம். தினேஷை காட்டிலும் ரசனைக்குரியவர் படத்தில் வரும் தினேஷின் அப்பா கதாபாத்திரம். குடிசை ...

Read More »

இறைவி – ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு

Share படம் முடிந்தவுடன் இறுகிய முகத்தோடு ஆண்கள் வெளியேறுகிறார்கள். உடன் வந்த மனைவியோடு, காதலியோடு, என்ன வார்த்தை பேசுவது என்கிற பதட்டம் அவர்கள் உடல்மொழியில் இருக்கிறது . படத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்வது போல  “அது லவ்ஸ் இல்லீங்க…குற்றவுணர்ச்சி”…!   காட்சிகளில் எதாவது ஒரு இடத்தில் ஆண்கள் தம்மை அவர்கள் இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். 30 ...

Read More »

மணிரத்னங்களின் வெற்றியும் , மக்கள் இயக்குநர்களின் தோல்வியும்

Share“ஒவ்வொரு எழுத்தாளரும் அரசியல் எழுத்தாளர்தான். இதில் உள்ள ஒரே கேள்வி ; எது , யாருக்கான அரசியல்? -யூகி வா தியாங்கோ “ எழுத்தாளர் என்ற சொல்லிற்கு பதிலாக கலைஞன் என்ற சொல்லை வைத்தும் இதே சொற்றொடரைச் சொல்லலாம், நூறு விழுக்காடு பொருந்தும்.  இங்கே ஒவ்வொரு படமும் ஒரு அரசியலைப் பேசுகின்றது, அது யாருக்கான அரசியல் ...

Read More »

போதாது ஒரு “விசாரணை” – திரை விமர்சனம் – மு.ஆனந்தன்

Share அரசுகளின் அடக்குமுறைக் கருவியான ஒட்டுமொத்த காவல் துறையின் ஒரு எடுத்துக்காட்டாக‌ திகழ்கிற அந்த குண்டூர் காவல்நிலையத்தில் மனிதத்தின் மீது விழுகிற ஒவ்வொரு கொடூர அடியும் உதையும் தாக்குதலும் செதில் பிடித்த இந்த அதிகார அமைப்புகளின் மீது எழுகிற விசாரணையே. பூட்சுகளும், லத்திகளும், உருட்டுக்கட்டைகளும் பனை மட்டைகளும் இன்னும் படத்தில் காட்டப்படாத நகங்களை பிடுங்குவது, எலட்ரிக் ...

Read More »

ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சி! – காக்கா முட்டை…

Share1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய பொருளாதாரம் உலகமயமாக்கலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகள் நம்முடைய சந்தையை திறந்துவிட்டது. திறக்கப்பட்ட சந்தையில் நுகர்வுப் பொருட்களாக கணிப்பொறியும், மின்னணு சாதனங்களும் மட்டும் வரவில்லை. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், கல்வி, மருத்துவம் என அனைத்தும் சந்தையில் ...

Read More »

அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..

Shareஅண்மை காலங்களில் ஐ.டி தொழிலாள‌ர்களின் வாழ்க்கையை  சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும்  வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன ...

Read More »