Home / கலை (page 5)

கலை

அநாகரீகத்தின் அடையாளம்

Share நாகரீகமே தலைநிமிர மறுக்கும் அநாகரீகத்தின் அடையாளம் அலையே கடலே எங்கு தொலைத்தீர்கள் ஈரத்தை எங்களைப் போலவே ! வெட்கப்படுகிறேன் என்னை மனிதன் என்று அழைக்க குழல் இனிது யாழ் இனிது அடச்சீ…….மூடு வாயை! ஆயுதங்களே அமைதியை தீர்மானிக்கிற சமூகத்தில் அகதிகளும் அரும்பும் மரணத்தின்…? — பாரதிதாசன் , இளந்தமிழகம் இயக்கம்

Read More »

சாதியே கொல்லும் !

Shareஅது நிகழ்ந்த பிறகு பூமியின் சுழற்சியே நின்று விடுமோ காற்றின் கவலை   பூமியை காவல் காக்கிற வேலையே வேண்டாம் உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு ஓடியே போனது இருட்டு   சாதிய வன்மம் காணச் சகியாது கண்களைக் குருடாக்கி குப்புறப் படுத்தது வெளிச்சம்   மனிதர்களைத் தீண்டுவதே மகாபாவம் சபித்து விட்டு நச்சுப் பைகளைத் துப்பி விட்டு புற்றுக்குள் புகுந்தன பாம்புகள்   அடச்…சீ ...

Read More »

ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சி! – காக்கா முட்டை…

Share1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய பொருளாதாரம் உலகமயமாக்கலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகள் நம்முடைய சந்தையை திறந்துவிட்டது. திறக்கப்பட்ட சந்தையில் நுகர்வுப் பொருட்களாக கணிப்பொறியும், மின்னணு சாதனங்களும் மட்டும் வரவில்லை. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், கல்வி, மருத்துவம் என அனைத்தும் சந்தையில் ...

Read More »

இதுவே உன் சாவின் நீதி

Share செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது  பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன்  என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு  யாரிடம் நீதி கேட்பேன்? இந்நாட்டு ...

Read More »

விடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.

Shareமுந்தைய இரவில் என்ன நடந்ததென்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஜன்னல் வழியாய் பால்யத்திலிருந்து நான் பார்த்த மேகமும் நிலவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால் மட்டும் எப்படி மாறிவிட முடிகிறது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அண்ணன் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கவில்லை. பதறி எழுந்த அந்தப் பின்னிரவு நடுக்கம் இன்னும் ...

Read More »

மரணங்கள் தீர்மானிப்பதில்லை – பாரதிதாசன்

Share மரணங்கள் தீர்மானிப்பதில்லை எம் பிரேதங்களின் மீது விழுந்து…புரண்டு அழுது …..அழுது மனதால் மரணித்துப் போன எம் பெண்டிர்தம் மரண ஓலங்களை மேனியெங்கும் பூசிக்கொண்டு ஓடும் காற்றிடம் கேள் ! பதில் சொல்லும் மரணங்கள் தீர்மானிப்பதில்லை “எச்சைக் கஞ்சியாச்சும் ஏந்தி வாங்கி உயிர் படைச்சவளுக்குக் கட்டக் கடைசியிலே பசியோடு பட்டினிப்போட எந்த நாய்க்கு மனசு வரும்” ...

Read More »

வண்ணவண்ணக் கொலைகள் – அவனி அரவிந்தன்

Share    மலையுச்சியில் இருந்து வீழும் கதியற்ற சொற்கள் எதிரொலித்து மறைவதைப் போல எழுந்து அடங்குகின்றன வதைக்கப்பட்ட உயிர்கள்   இன்னும் சாயம் வெளுக்காத நீலநரியாக அலையும் வல்லாதிக்க வானத்தின் கீழ் வன்கொடுமைகளெல்லாம் வழமைக்குரியவை தான் என்றாலும் எரிந்துக் கருத்த உடல்களின் பழுத்துக் கிழிந்த பாகங்கள் பறையடித்துக் கதறுகின்றன பச்சைப் படுகொலைகளை பிணத்துக்கொன்றாய் கிடக்கும் தொல்குடிகளின் ...

Read More »

“சுடுமணல்” – சிறுகதை

Shareபாயம்மாவை விட அவள் உற்பத்தி செய்கிற‌ இடியாப்ப ருசியையும், பாரதி நகர் பேருந்து நிலைய திண்டின் லாந்தர் ஒளியையும் சட்டென்று யாராலும் மறந்து விட முடியாது. மாலை நேரங்களில், பாலத்தினின்று கீழிறங்கும் 2ஏ, 33,116 ஆகிய‌ வடசென்னையின் நெளிவு சுளிவுகளுக்குள் புகுந்தலையும் எல்லா பேருந்துகளும் பாயம்மாவின் இடியாப்ப வாசனையை நுகராமல் நகர்ந்து விட முடியாது. இடியாப்பத்திற்கு ...

Read More »

யாது வேண்டின் பெண்ணுக்கு – உழைக்கும் மகளிர் நாள் பதிவு

Shareஅம்மி யோடுமதன் ஆட்டாங்கல் லோடும் விம்மி மிகுவேலை புரிவார்க்குச் சொல்லில்லை கணினி யோடுமதன் படிப்போடும் தன்னார்வமோடும் பணியா லிவர்க்குக்கடுஞ் சொல்லே திங்க ளொருமுறை வெடிக்குமண்டச் சிதைவால் நீங்க ளென்றுமிங்கு தீட்டென்பாரிவரே இவ்வுலக விண்ணு மதுதாண்டி வெடிக்குமண்டச் சிதைவை தன்பே ரறிவென் றுரைப்பார் துணையற்ற இளம்பெண்ணை விதவையென் பார்பொய் வினையற்ற மெய்தன்னை வேற்றுடமை யென்பாரிவள் மறுமணம் மறுத்துப்பல ...

Read More »

எப்படிச்சொல்வேன்

Share  சிவந்ததொலைக்காட்சி திரை கண்டு மழலைதன் மொழியில் யாரிவர்கள் எப்படி இறந்தார்களென்று வினவ அய்யோ! எப்படிச்சொல்வேன் புதிய உலகைப்படைக்க புறப்பட்டவர்கள் சாகவில்லை சாகடிக்கப்பட்டார்களென்று சோறுண்ணத்தெரியா அவளிடம் வன்முறைகளிலிருந்தும், போர்களிலிருந்தும், பாலியல் தொல்லைகளிலிருந்தும் தற்காக்க கற்றுக்கொள்ளென்று எப்படிச்சொல்வேன்   துளிர்விட்டெழும்பும் அவள் வாழ்வில் பயத்தையும் அவநம்பிக்கையையும் விளைவித்தல் அறமோ! பிறப்பைபற்றியறியா அவளிடம் இறப்பு, வன்முறை, பாலியல் தொல்லைபற்றி ...

Read More »