Home / சிறப்புக் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள்

இட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்

Shareஇந்தியாவில் இட ஒதுக்கீடு கொள்கை மீதான விவாதம் இரண்டு துருவங்களுக்கு இடையிலான விவாதமாகத் தான் நடைபெற்று வருகின்றது. “பொதுப் பிரிவைச் சேர்ந்த மக்கள் (உயர் சாதியினர்) இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட வேண்டிய காலமிது. நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை “தகுதியில்லாத, சாதிச் சலுகை கொண்ட சிறுபான்மைக்கு” கொடுப்பதும் ஒருவித ஒடுக்குமுறையே – நிஷா பாண்டே – ...

Read More »

ஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு

Share“100% லாபம் என்றால் முதலாளித்துவம் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% லாபம் என்றால் முதலாளித்துவம் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது – தூக்குக் கயிறை எதிர்கொள்ள வேண்டுமென்றாலும்கூட!”    – தாமஸ் ஜோசெஃப் டன்னிங், தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், 1960 1994ல் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் தமிழகத்தில் ...

Read More »

மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் ?

Shareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த  பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன.  உடனே மக்கள்  எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...

Read More »

அண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்

Shareபாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர்.  பொருளாதார நிபுணர்,  சட்ட நிபுணர்,  அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட தலைவர்,  பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர்,  தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர்,  இசை கலைஞர் என எண்ணிலடங்காத‌ பல பரிமாணங்களை கொண்டவர் அவர். இந்திய சாதிய சமூகம் அவரை “தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக” மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் ...

Read More »

சமையலறைகளைத் தடை செய்! பொது உணவகங்களை உருவாக்கு !

Shareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள்? என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால்? என்ற கேள்வியை எழுப்பி ...

Read More »

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2

Share2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்)  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...

Read More »

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

Share2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...

Read More »

என்ன நடக்கிறது சிரியாவில் ?

Shareரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் ...

Read More »

மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்

Shareமோடி அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக. இந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget)  மோடி அரசின் நிதி ...

Read More »

“எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது”

Shareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில்  பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...

Read More »