Home / Tag Archives: war crimes

Tag Archives: war crimes

காத்திருப்பு அரசியலின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

Shareஅரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும்  நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை  தண்டிக்க முற்படும்  வெளிச்சக்திகளை  வெற்றிகரமாக  தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது.  அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ...

Read More »

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Shareதமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா. அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை  மூன்றாவது முறையாக  தமிழக அரசு அண்மையில்   நிறைவேற்றியது. தமிழக அரசின்  தீர்மானங்கள் இந்திய அரசை இக்கோரிக்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து பன்னாட்டு ...

Read More »

உண்மையை அச்சமின்றிச் சொல்லும்  ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? – நிலாந்தன்

Shareபோர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய  பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் ...

Read More »

இனக்கொலைக்கான நீதிக்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறையே வேண்டும்: தமிழகத் தலைவர்கள் கூட்டறிக்கை

Shareஈகச்சுடர் திலீபன் அவர்களின் 28வது நினைவு நாளான செப்டம்பர் 26,2015 சனிக்கிழமை அன்று, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தினாரால் ’இனக்கொலைக்கான நீதிக்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறையே வேண்டும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் ஒருங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கதின் பொதுச் செயலாளர் தோழர் பாரதி ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

Share அனைத்துலக விசாரணை எனப்படுவது  ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு.  தமிழர்களில் பெரும்பாலானவர்கள்  அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கின்றார்கள்.  தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் (அறிக்கை) அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது.  ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு ...

Read More »

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

Shareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...

Read More »

தமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…

Shareஇலங்கை அதிபராக இராசபக்சே எனும் கடும்போக்காளர் தோல்வி அடைந்து இலங்கையில் மைத்ரிபால எனும் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஒரு சனநாயக மாற்றம் இலங்கையில் நடைபெற்றுள்ளது போலவும், 13 ஆவது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைபடுத்த தயாராக உள்ளது என்பது போன்ற கருத்துக்களை இந்திய ஊடகங்களாலும் அரசு ஆதரவாளர்களாலும் தொடர்ந்து கருத்துகள் பரப்படுகின்றன. இந்தச் சிந்தனையில் ...

Read More »

சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015

Share2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது. எதிர் வரும் சனவரி ...

Read More »

புலிகள் மீதான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பும் – கடக்க வேண்டிய தூரமும்

Shareஎல்லாவிதமான பாதைகளும் கதவுகளும் அடைபட்டாலும் ஏதோ ஒரு கதவு திறந்தே தீரும். அதுவும் தானாக திறக்காது என்பதுதான் கவனிக்க வேண்டிய உண்மையாகும்.  அப்படியான ஒரு சிறிய பாதை ஒன்றை இரண்டு சட்ட மாணவர்களும் (லதன், ரஜீவ்) அவர்களின் பின்பாக நின்ற ஒருசில தகைமையாளர்களும் திறந்து வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியான போது அதற்கு ...

Read More »